Sunday, October 06, 2013

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 9

Leo Tolstoy [1828-1910] லியோ  டால்ஸ்டாய் எழுத்தாளர், நாடக ஆசிரியர், தத்துவவாதி. உயிரோட்டம் கொண்ட எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். மத்திய ரஷ்யாவில் எஸ்நயா போநியனா எனும் ஊரில் 1828-ஆம் ஆண்டில் பிறந்தார் படிப்பில் மக்கு ஆசாமி" படிப்புக்கும் நமக்கும் அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் உள்ள சொந்தம். அதனால் 'இரும்பு அடிக்கும் இடத்தில் 'ஈ’க்கு என்ன வேலை’ என்று பல்கலைக்கழக படிப்புக்கு பாதியிலே "டாட்டா" காட்டி விட்டு நடையை கட்டினார். அவருக்கென்ன? படித்து சம்பாதித்துதான் குடும்பத்தை ஒட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எற்கனவே பாட்டன் பூட்டான் தேடிபோட்ட நிலபுலன்களும் சொத்து சுகங்களும் குவிஞ்சு கிடக்கு. அது பல தலைமுறைக்கு சும்மா வெளிய சுதித்திட்டு வந்து சோறு உண்ணலாம். அப்புடி கொட்டி கெடக்கு பாட்டன் பூட்டான் சொத்து.

படிப்பில் "டல்" பேர்வழியான டால்ஸ்டாய் எழுத்துலகில் கொடிகட்டி பறந்தார். 1869ல்அவர் 'எழுதிய ¬'War and Peace'- [போரும் அமைதியும்] என்ற நாவல் எடுத்த எடுப்பிலேயே அவரை எழுத்துலகின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ‘போரும்-அமைதியும்’ சாகாவரம் பெற்ற நாவல்களின் VIP முதல் வரிசையில் இடம் பெற்ற நாவல். தமிழ் உள்பட பல மொழிகளில் மொழி பெயர்ப்பு கண்ட கில்லாடி நாவல்.

'அன்னா கரீனா’ இதுவும் டால்ஸ்ட்டாயின் சிறப்பான படைப்பு. நாவல் வட்டத்தில் வரவேற்பு வளையம் கட்டி ’’வா! வா’’என்று அழைக்கப்பட்ட இதுவும் பலமொழிகளில் அவதாரம் எடுத்தது. ஆங்கில திரைப்படத்திற்கு கதை கொடுத்து ஹாலிவுட்டுக்கு ‘கை கொடுத்த’ நாவல்.

# ஆங்கிலஇலக்கியச்  சிற்பிகளின் வரலாற்றில் Charles Dickens [1812-1870]. சார்லஸ்டிக்கன்ஸ் என்ற பெயர் என்றும்‘கல்மேல் எழுத்து போல் காணும்’. இவரின் ஆலிவர்டு விஸ்ட் [Oliver Twist - 1838] இரு நகரங்களின் கதை [Tale of Two Cities-1859] The Great Expectations - 1861] ஆங்கில இலக்கிய பீடத்தை அலங்கரிக்கும் பொன் நகைகள். டிக்கன்ஸ்  கைவண்ண கண்ட Tale of Two Cities ‘இரு நகரங்களின் கதை’ பிரான்ஸ் நாட்டில் புரட்சி எழுந்த காலத்தை பின்புலமாக கொண்டு எழுதிய கதை. இதை  பன்மொழிப் புலவர் பேராசிரியர் கா.அப்பாத்துரை அவர்கள் 1950ம் ஆண்டு வாக்கில் தமிழில் மொழியாக்கம் செய்து ’’இரு நகரங்களின் கதை’’யென வெளியானது. Mystery  of Edwin Drood என்னும் கதையை பாதி எழுதும் போதே 1870–ம் ஆண்டு டிக்கன்சனின் ஆவி பிரிந்தது.

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை அவர்களை இன்றைய இளந்தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர்எழுதிய இன்னொரு புத்தகம் ‘’தென்னாட்டு போர்க்களங்கள்’’. இவர்பதினாறு மொழிகளில் புலமை பெற்று விளங்கினார்.

# சுமார் ஏழு தலைமுறைக்கு முன், வெள்ளையர்களும் அவர்களின் கைக்கூலிகளும் மிருங்களை வேட்டையாடுவது போல்தென் ஆப்பிரிக்க மக்களை வேட்டையாடி அவர்களின் சொந்த மண்ணை விட்டு புதிய கண்டமான அமெரிக்கா நாட்டுக்கு ஆடுமாடுகளை போல் கப்பலில் கடத்தி சென்றார்கள். 

மாதக்காணக்கானஇந்த கப்பல் பயணத்தில் அப்பாவி ஆப்பிரிக்கா மக்கள் பட்ட சொல்லெனா துயரத்தை சொல்லில்சொல்ல சொல்இல்லை. பசி பட்டினி வதை நரக வேதனையை கப்பல் பயணத்தில் அனுபவிக்க இவர்கள் என்னபாவம் செய்தார்களோ? கப்பல்பயணம் பூலோக நரகமானது. வெள்ளையர்களின்அடங்காத பணப்பசிக்கு ஏதும் அறியா ஆப்பிரிக்க கறுப்பர்கள் இரையாகிப் போனார்கள்.

பிறந்து வளர்ந்தசொந்த மண்ணிலே காட்டிலும் மேட்டிலும் காலெடுத்து ஓடியும் ஆடியும் பாடியும், வில்லெடுத்து வேட்டையாடியும், அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற ரத்த பாசமும் நேசமும் ஒன்று கலந்து வாழ்ந்த கறுப்பர்கள் அந்நிய மாண்ணில் அடிமைப் பிடியில் சிக்கிச் சீரழிந்து தவித்தார்கள்.

ஆப்பிரிக்காவிலிருந்துகடத்தப்பட்ட கருப்பின மக்களை அடிமைச் சந்தையில் ஆடு மாடுகளைவிடகேவலமாக ஏலம்கூறி விற்றார்கள். விலைபோட்டு வாங்கிய வெள்ளை முதலாளிகள் தங்கள் விருப்பம் போல் இரவென்றும் பகல் என்றும் பாராமல் ஓய்வு இன்றி இவர்களின் ரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சி குடித்தார்கள்.

இது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் நடந்த சோகமும் உண்மைஒன்று கலந்த கருப்பு வரலாறு. கருப்பு அடிமைகள் 250ஆண்டுகளாக அமெரிக்காவில் பட்ட அவஸ்த்தைகளை புத்தகங்களில் படிக்கும்போது அதை ஒரு பொழுது போக்காகவே பெரும்பாலோர் படிக்கிறார்கள். என்னால் அப்படி அதை பார்க்க முடியவில்லை. காரணம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மலாயா-விலும் [அப்பொழுது இந்த பெயரில்தான் அழைக்கப்பட்டது] பிரிக்கப்பாடாத தஞ்சாவூர் மாவட்டத்தின் முஸ்லிம் முதலாளிகள் அமெரிக்க அடிமை முறையை தழுவியே தங்ககள் கடைகளில் வேலை செய்யும் ஆட்களையும் அடிமைகளாகவே நடத்தினார்கள். அதில்என் போன்றோர் அடிமை செக்குமாடுகள் ஆனோம். அந்தவலியின் தாக்கமே அமெரிக்க கருப்பு அடிமைகளின் வலியை என் வலியாக உணரச் செய்கிறது. [இன்ஷா அல்லாஹ் இந்த மலேசிய அடிமைகளின் கதையை பின்னொரு சந்தர்பத்தில் தொடரலாம்.]

எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி [Alex Haley] அமெரிக்க கருப்பினத் தலைவர் [Malcomx] மால்கம்க்ஸ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுத பல நூலகங்களில் ஆதாரங்கள் தேடியபோது, ஹேலியின் மூதாதையர்களிலில் ஒருவரும் கடத்தப்பட்டு அடிமைச் சந்தையில் விலை பொருளாய் போன தடமும் அவர் கையில் சிக்கியது. இந்தச் ’சிக்கல்’ அவர் மனதில் ஒரு ’கிக்’கை உண்டாக்கியது. தன் மூதாதையாரின் வரலாற்றையும் அவர்களின் ‘நிறம்’ அவர்களைஅந்நிய மண்ணில் விலை பொருளாய் மாற்றியதையும் கண்டறியும் ஆர்வத்தையும் வேட்கையையும் தூண்டியது. ஆப்பிரிக்கா சென்று இன்று அமெரிக்காவில் வாழும் ‘’கறுப்பு அமெரிக்கர்களின்’’ வரலாற்றுச் சுவடுகளைத் தோண்டி எடுத்து உலகின் கண்களுக்கு காட்ட வேண்டும்’’ என்ற -ஆசை, வேகம், வெறி., என்ற ‘தீ’ நெஞ்சுக்குள் பற்றி எரிந்தது. வேகம், வெறி இவைகள் நல்ல நோக்கங்களை மையமாய் கொண்டுஎழுந்தால் நல்ல விளைவுகளை அறுவடை செய்யலாம். எண்ணமும் திசையும்வேறுவழியில் மாறுமேயானால் ’’.As you sow so will you reap’’ எதை விதைக்கிறாயோ அதையே அறுவாடை செய்வாய்.’

எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி தன் பூர்வீகம் பூத்த மண்வாசனை நுகரவும் புதைந்து போன வரலாற்றுப் புதையலை தோண்டி எடுக்கவும் ‘இருண்ட கண்டம் ’என அழைக்கபட்ட தென் ஆப்பிரிக்கா நோக்கி அடியெடுத்து வைத்தார். அங்கே ஐந்து ஆண்டுகள் காடு-மேடு பள்ளம் படுகுழி பகல் இரவு மழை வெயில் என்ற எந்த இடரையும் பொருட்படுத்தாமல் 'தூண்டில்காரனுக்கு மிதப்பு மேல் கண்’ என்பது போல் காரியத்தில் ‘கண்’ணாக இருந்தார். ’முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற சொல் மெய்யாகிப்போனது.தேடிதேடி அலைந்து களைத்துப் போன அலெக்ஸ் ஹேலிதேடியதை கண்டுபிடித்து விட்டார்.

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு கடத்தப்பட்ட ஆயிரம் ஆயிரம் அப்பாவி ஆப்பிரிக்க பூர்வகுடி மக்களில் kunta kinti ‘குந்தா கிந்தி’ என்ற பெயருடைய பாதினாறு வயது சிறுவனும் ஒருவன்.

அலெக்ஸ் ஹேலி தேடிவந்த தன்னுடைய அமெரிக்க மூதாதையர்களின் முதல் விதைதான் இந்த குந்தாகிந்தி. அமெரிக்க மண்ணில் விலைபொருளாகி அடிமைகளாகஇருந்தவர்கள் அடிமை ஒடிந்தபின், விவசாயிகளாக. கொல்லர்களாக, சட்ட நிபுணர்களாக கட்டிடக்கலை வல்லுனார்களாக வாழ்வோர்களின் மூலபிதா. இருநூறு ஆண்டுகளுக்கு முன் பதினாறாம் வயது பாலகன் பருவத்தில் கடத்தப்பட்ட குந்தா கிந்தி என்பவர். இந்த குந்தா கிந்தி அலெக்ஸ் ஹெலியின் பாட்டனுக்குபட்டனுக்கு பாட்டனுக்கு பாட்டனுக்கு பாட்டனுக்கு பாட்டன். இருநூறு  வருசத்துக்கு முந்திய பாட்டனை தேடி அலெக்ஸ் ஹேலி அமெரிக்காவிலிருந்து தென் அப்பிரிக்கா வந்தார். பாட்டனைத்தேடிவர் பாட்டனையே கண்டார்.

இதை எழுதும்போது எனக்கு ஒரு சந்தேகம். இந்தியாவை தேடிப் போன கொலம்பஸ் குறுக்கே வந்து தடுத்து ‘’எங்கூருக்குவா’’ என்று சிவப்பு கம்பளம் விரித்த அமெரிக்கா தென் ஆப்பிரிக்க மக்களை கூட்டி போய் ஏன் அடிமை ஆக்கியது?

கடத்தப்பட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாகி காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக அனுபவித்த தொல்லை துயரங்களை எல்லாம் ஒன்று திரட்டி அமெரிக்கா கருப்பினத்தின் புதிய தலைமுறையை சார்ந்த அலெக்ஸ் ஹேலி [குந்தா கிந்தியின் ஏழாவது தலைமுறை] ஒரு புத்தகம் எழுதினார். புத்தகத்தின்  தலைப்பு - ROOTS - [One man’s epic search for his orgins] - ‘வேர்கள்’ - [தன் முன்னோர்களின் நாற்றாங் கால்களை தேடும் ஒரு தனி மனிதனின்வேட்கை.] என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார். அடிமை விலங்குபூட்டிய தென் ஆப்பிரிக்க மக்கள்  ஏழு தலை முறையாக அமெரிக்காவில் அவர்கள் அனுவித்த தொல்லைகள், துயரங்கள், வேதனைகள் ‘வதைகள், கொடுமைகள் எல்லாவற்றையும் விரிவாக அதில் எழுதினார். புயல் காற்றில் சிக்கிய பஞ்சு போல் புத்தக விற்ப்பனை பறந்தது. அதை படித்த அமெரிக்கர்கள் கசிந்து மனமுருகி கண்ணீர் வடித்தார்கள். மனசாட்சி அவர்களை உறுத்தியது. அமெரிக்கர்களின் உறங்கிய மனசாட்சியை உசுப்பியது ROOTS.

ROOTS அமெரிக்க தொலைக்  காட்சியில் தொடராக வந்தபோது, வீதிகளில் கார்களின் ஓட்டமோ மக்கள் நடமாட்டமோ ஏதுமில்லை. அது நாதையாக வெறிச்சோடி கிடந்தது. மக்கள் TV முன் தஞ்சமடைந்து குவிந்து  கிடந்தார்கள்.

தங்கள் முன்னோர்கள் ஆப்பிரிக்காவின் கறுப்பு மனிதனுக்கு செய்த கொடுமைகளையும் அநீதிகளையும் கொடுரங்களையும் TV தொடரில் கண்டு நெஞ்சம் கொதித்தார்கள். ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். மனசாட்சி அவர்களை கொஞ்சம்கொஞ்சமாக கொத்திக்கொத்தி தின்றது.மனசாட்சியின் உறுத்தலுக்கு மருந்து தேடினார்கள்.  அதுமருந்துக் கடைகளில் கிடைக்க வில்லை இருந்தால்தானே கிடைக்கும் தேடினார்கள்.

அதற்க்குமருந்து இறைவனிடம் இருந்தது. ‘’மன்னிப்பு’’ இது மருந்துகளுக்கு எல்லாம்மருந்து. ஒரு நாள் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்று கூடி ’’ஒ.......இறைவா! எங்களை படைத்தது ரட்சித்து காப்பவனே! எங்கள் மூதாதையர்கள் அறிந்தோ அறிமலோ செய்த பாவங்களை மன்னித்து அருள்வாயாக!" என்று மன்றாடினார்கள். மனிதஇனத்துக்கும் மிருகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். ஆனால்இந்த பண்பாடு ‘எல்லா மனிதனிடமும் உண்டா?’ என்பதே இன்றைய கேள்வி.
தொடரும்
S.முஹம்மது பாஃரூக்

15 comments:

  1. Assalamu Alaikkum

    Dear Uncle,

    This episode explores legends in the world of knowledge and books. Its amazing to now about a Tamil professor who is well versed in 16 languages.

    Actually the British vampires not enslaved blacks, but Malay people also. They had shifted Malay people as slaves to South Africa in those days. Still Malay ethinic people are living South Africa.

    Actually forgiving is a noble act, that literally cures cancer like diseases according to researches.

    Thanks and best regards,

    B. Ahamed Ameen from Dubai.

    ReplyDelete
  2. Correction:

    Actually the British vampires not only enslaved blacks, but Malay people also.

    ReplyDelete
  3. Assalamu Alaikkum

    There are few typos: கறுப்பின - கருப்பின

    ReplyDelete
  4. இந்த தொடரை சிறப்பாக எங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மூத்த ஃபாருக் காக்கா அவர்களுக்கு வல்லமை நிறைந்த அல்லாஹ் செழிப்பான அரோக்கியத்தையும், திடமான உடல் வளத்தையும் நீண்ட நாட்களுக்கு வழங்கி அருள் புரிவானாக !

    காக்கா, உங்களின் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளுங்கள், இளையவர்கள் நாணிக் கொள்ளும் அளவுக்கு உங்களின் சுறு சுறுப்பும் அவர்களை வாசிக்க வைக்கும் வசீகரமும் மேலும் தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

    ReplyDelete
  5. அலெக்ஸ் ஹேலி எழுதிய ROOTS நூலை அப்துல் ஹமீது என்பவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். இதை வாங்கிப் படிக்கும்படி மதிப்புக்குரிய சகோதரர் கணிணி தமிழ் அறிஞர் எஸ். ஜெமீல் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நானும் வாங்கிப் படித்தேன்.
    அடிமைகள் படும் துயரங்கள் - வாழ்க்கை - யாவும் படிக்கும்போது கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    கவிஞரும், தமிழாசானும், எழுத்தாளருமான தஜம்மல் முஹம்மத் என்பார் எனக்கு மின் மடலில் இவ்வாறு:

    // அண்மையில் ஓர் அலுவலை முன்னிட்டுச் சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘பிரிட்டிஷ் கௌன்சி’லுக்குச் சென்றிருந்தேன்.சென்ற வேலை தொடர்பாகச் சிறிது காத்திருக்கச் சொன்னார்கள்.சரி என்று நான் அங்குள்ள நூலகத்தைச் சுற்றிப்பார்த்தேன்.வெளியில் விற்பனைக்குக் கிடைக்காத பத்திரிகை, புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.தற்செயலாகத் தலை நிமிர்ந்த போது “Reader is the Leader” என்று எழுதப்பட்ட வாசகத்தைக் கண்டு மகிழ்ந்தேன்! வியந்தேன்!!

    விடாப்பிடியான வாசிப்பாலும்,அதனால் பெற்ற பண்பாலும்,அது உருவாக்கிய ஆய்வுப் பண்பாலும் உண்மையிலேயே தலைவராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களே எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தார். “Reader is the Leader” என்ற சொலவம் அண்ணாவுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும்.

    இன்று பலரும் அறிந்திராத அல்லது மறந்துவிட்ட -அந்தக் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய- டார்பிடோ ஜனார்த்தனம் என்ற திராவிட இயக்கப் பிரமுகர் (அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த என் உடன் பிறவாத உண்மைச் சகோதரர் ஜே.எஸ்.இராசு,பி.ஏ;பி.எட்; அவர்கள் மூலம்)எனக்கு நல்ல பழக்கம். அவர் அண்ணா உயிரோடு இருக்கும்போதே “Anna Sixty ” என்ற சிறப்பு மலரை வெளியிட்டவர். ஆந்திராவைச் சேர்ந்த அவர் நல்ல தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் பெற்றவர்;அண்ணாவோடு நல்ல நெருக்கம் உள்ளவர்.அவர் அண்ணாவைப் பற்றிச் சொன்னவை இன்னும் என் நினைவில் இருக்கின்றன.அவற்றுள் ஒன்று:

    ReplyDelete
  7. தொடர்ச்சி...............................

    அண்ணா நூல்களை விரும்பிப் படிப்பார்.அவை பெரும்பாலும் ஆங்கில நூல்களே. சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நூல் என்று படித்து முடித்துவிடுவார். அவற்றை அவர் நன்கு நினைவில் வைத்துக்கொள்வார்.அவர் படித்து முடித்த நூல்களைக் குவித்தால் குன்றுபோல் இருக்கும். அவர் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்.அது ஒரு புதிய மொழி நடைபோல் தனித் தன்மையோடு அமைந்திருப்பதைக் காண்கிறோம்.ஆங்கில வாக்கிய அமைப்பைத் தழுவியதாகவே அண்ணாவின் தமிழ் மொழி நடை இருக்கும்.அது சுவையாகவும் இருக்கும்.(அந்தக் காலத் தமிழ் இலக்கண நூலில் தமிழின் பலவகை மொழி நடை பற்றிச் சொல்லி வரும்போது,ஆற்றொழுக்கு நடைக்கு அண்ணாவின் எழுத்தையோ,பேச்சையோ மேற்கோளாகக் காட்டுவர்.-இவ்வளவுக்கும் அது காங்கிரஸ் ஆட்சிக் காலம்!)

    அண்ணாவின் அழகு தமிழ் நடையை ”திராவி நாடு,காஞ்சி” ஆகிய ஏடுகளில் நெடுங்காலம் படித்துச் சுவைத்தவர்களில் நானும் ஒருவன்.கடித இலக்கியத்திற்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தியவர் அண்ணா என்றால் அஃது எந்த வகையிலும் மிகை அல்ல.உயர்ந்த இலட்சியத்திற்காகப் பாடுபடவேண்டிய ஒருவன், பயனற்ற அற்பச் செயல்களில் ஈடுபடுதல் கூடாது என்று சொல்ல விரும்பும் அண்ணா,”திருக் குளத்தில் இறங்கி பாசி பறிப்பது போல”என்பார்.இது போல் பல.

    ReplyDelete
  8. தொடர்ச்சி................

    அன்றும் இன்றும் படிக்காமலேயே நூல்களுக்கு அணிந்துரை தந்தத் தலைவர்கள் உண்டு. அண்ணா அதற்கு விதி விலக்கு.படித்துப் பார்த்து அணிந்துரை தருவது மட்டுமல்ல-அந்த நூல் தகுதியுள்ள நூலென்றால் அதை வாசகனின் நெஞ்சில் பதியவைக்கும் விதத்தில் அவர் அணிந்துரை இருக்கும்.இதற்கு ஓர் எடுத்துக்காட்டு: ஆலிம் புலவர் என்று அறியப்பட்ட சிராஜ் பாக்கவி அவர்கள் எழுதிய ”நெஞ்சில் நிறைந்த நபிமணி” என்ற காப்பிய நூலுக்கு அண்ணா கொடுத்துள்ள அணிந்துரையைப் படித்துப் பாருங்கள்.இன்றைக்கும் இதயத்தைத் தொடும்.

    வாழ்வின் இறுதிவரை அண்ணா படிப்பவராக இருந்தார் என்பது பலரும் அறிந்த செய்தி. அந்தப் படிப்பைத் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் தன்னிகரற்றத் தலைவராகத் தன்னை மிக இயல்பாக நிலைநிறுத்திக்கொள்ளவும் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு உபயோகப்படுத்திக்கொண்டார் என்பது நான் உணர்ந்த செய்தி.

    கல்லூரிக் கல்வி முடியும்வரை தமிழ் இலக்கியங்கள் எவற்றையும் பெரிதாகப் படித்திராத அண்ணா,தமிழனாகிய நாம் அவ்வாறு இருத்தல் கூடாது என்று எண்ணி, அப்போது மண்ணடியில்(பிராட்வே?) இருந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்குச் சென்று அவர்கள் வெளியிட்ட அத்தனை நூல்களையும் மொத்தமாக வாங்கி வந்து படித்து முடித்தார் என்பது ஓர் அரிய செய்தி. அது மட்டுமல்ல எழுத்தெண்ணித் தமிழ் படித்த புலவர்களே வியக்கும் தமிழறிவுக்குச் சொந்தக்காரராகவும் அண்ணா ஆனார்.

    ReplyDelete
  9. தொடர்ச்சி.....................................

    கம்ப ராமாயணத்தைக் கொள்கை அடிப்படையில் கடுமையாக எதிர்த்த அண்ணா, அதன் இலக்கியச் சுவையைத் தனிப்பட்ட முறையில் பேசும்போது சொல்லி வியக்கத் தவறியதில்லை.

    அண்ணா யேல் பல்கழக அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற போது,”சிந்தனைப் பேரரசே சென்றுவா சிறப்போடு” என்ற தலைப்பில் பாவேந்தர் எழில் என்ற சிறிய இலக்கிய இதழில் எண்சீர் விருத்தத்தில் நான் எழுதி முதல் பக்கத்தில் வெளியான கவிதை அண்ணாவிடம் அளிக்கப்பட்டது என்பது எனக்கு இன்றும் மகிழ்ச்சிதரும் நினைவாக இருக்கிறது.

    முகம் தெரியாத கவிஞன் என்று கூடப்பார்க்காமல் யாரோ ஒருவர் எழுதி,அது அண்ணாவால்’திராவிட நாடு’ இதழில் முதல் பக்கத்தில் ஒரு கவிதை வெளியிடப்பட்டது.அதுதான் பின்னர் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா அவர்கள் தாமே இசையமைத்துப் பாடி தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்றும்கூடக் கேட்கப்படும் “அழைக்கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா...”

    அண்ணா தமிழ் நூல்கள் படித்தார்;ஆங்கில நூல்கள் படித்தார்.அதனால் அவர் “Reader is the Leader” என்பதற்கேற்ப சிறந்த தலைவராகத் திகழ முடிந்தது என்பதை அறிவார்வம் உள்ளவர்களுக்குக் கவனப்படுத்தவே இந்தக் கட்டுரை.

    ஏடு தூக்கி இன்று படித்து,நாடு காக்கும் தலைவர்களாக,அறிஞர்களாக நம் மக்கள் நாளை விளங்குதல் வேண்டும் என்பதே நம் விருப்பம்.
    ---ஏம்பல் தஜம்முல் முகம்மது
    \\
    அனுப்பியிருந்தார்கள்; புத்தகம் படிப்பதன் அவசியம் உணர்த்தவே ஈண்டுப் பதிகிறேன்.

    ReplyDelete
  10. அன்பின் மூத்த காக்கா அவர்களின் “புத்தகம் பிறக்கிறது” ஓர் அற்புதமான கட்டுரை, வாழ்த்துகள்; பாராட்டுகள்

    வயதாலும், வாழ்வியல் புரிதல்களாலும் உயர்ந்த இடத்தில் உள்ள காக்கா அவர்களுக்காக அதிகம் அதிகம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!

    ReplyDelete
  11. ஃ பாரூக் காக்கா வாழ்க.............

    ReplyDelete
  12. முகநூலில் படித்ததில் பிடித்தது:

    \\வாழ்வெனும் புத்தகத்தில்
    சில பக்கங்களை
    பொக்கிஷமாய்ப் போற்றுகிறோம்
    நினைவுக் குறிப்பேடுகளாய்....\\

    -Meera Blossom

    ReplyDelete
  13. அருமையானப் பதிவிற்கு நன்றியும் துஆவும்

    ReplyDelete
  14. //கடல் நீருக்கு கீழே நிலம் இருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லையோ//

    பூமியின் மேற்பரப்பில் நீர் 79% போக எஞ்சியிருப்பது 21% நிலப்பரப்பு என்று பொருள் கொண்டால் குழப்பமில்லை.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

    // ஒருபுத்தகம்பிறக்கிறது // தொடர்-9க்கு பாராட்டுக்கள் எழுதிய அ,நி. அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்

    இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்...!

    S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.